×

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

நாகை: வேதாரண்யத்தில் கடந்த 28 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்கு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் மூட்டைகள் மீது அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக கூடுதல் அதிகாரிகளை நியமித்து நெல் கொள்முதல் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 28 நாட்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள மூட்டைகள், கொள்முதல் செய்யாததை கண்டித்தும், கொள்முதல் நிலையங்களில் போதுமான அலுவலர்கள் பணியில் இல்லாததாலும், உடனடியாக தங்கள் நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிபுரம் மேற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விவசாயிகள் சிரமப்பட்டு நெல் சாகுபடி செய்து கொண்டு வந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இணையதள வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். பணியாளர்களை அதிகளவில் நியமிக்க வேண்டும். போதுமான அளவு சாக்குப்பைகளை ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். பிரிக்கப்பட்ட நெல்களை உடனடியாக கிடங்குகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. வேதாரண்யம் தாலுக்காவில் 27 நெல் கொள்முதல் நிலையங்கள்  உள்ளது. இதில் கறுப்பன்புலம், ஆதனூர், அந்தர்காடு, அஞ்சேற்றிக்குளம், தாலிக்கோட்டகம், வாய்மேடு, மனக்காடு உள்ளிட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் தேங்கி உள்ளது. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Tags : hunger strike ,district ,Nagarai ,Farmers protest ,Paddy , Prostitution, Paddy Purchasing, Resistance, Farmers, Hunger Struggles
× RELATED முட்டை விற்பனை ஜோர்